கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவருக்கு பெண் தோழி ஒருவர் இருக்கிறார். இவருக்கு கல்லூரி முடிந்த நிலையில், தனது பெண் தோழியுடன் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். இதையறிந்த கிரண், தோழியை பார்ப்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று, சாப்பிட்டு முடித்து விட்டு வா… ஜாலியாக ஒரு ரெய்டு போகலாம். அப்படியே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என சொல்லி, அந்த மாணவியை தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், இங்கிருந்து அருகில் தான் தனது இன்னொரு தோழி இருக்கிறாள். அவளுக்கு உன்னை அறிமுகப்படுத்துகிறேன் என்று ஆசைவார்த்தைப் பேசி, அருகில் இருந்த குடோன் ஒன்றுக்கு மாணவியை கிரண் அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சென்றதும், மாணவியை திடீரென கட்டிப் போட்டு ஆசை தீர பலாத்காரம் செய்துள்ளார். பல மணிநேர சித்ரவதைக்கு பின்னர் நினைவு திரும்பிய மாணவி, கிரண் சாப்பாடு வாங்க சென்றிருந்த நேரத்தில் அரைகுறை ஆடைகளுடன் குடோனில் இருந்து தப்பிச் சென்று அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கிரணை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக அவரிடம் வீடியோ ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.