தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை கல்லூரியிடம் அல்லாமல் நேரடியாக அரசிடமே செலுத்தலாம் என, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.
மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் மருத்துவர்கள் கலந்தாய்வுகள் குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில், இயக்குநர் நாராயண பாபு கூறுகையில் ’’ மருத்துவர்கள் கலந்தாய்வு 36 மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது. இதில் 1553 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கான கலந்தாய்வில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 90 முதல் 95% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
ஊட்டி, திருப்பூர், நாகை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 100 சதவிகிதம் மருத்துவர்கள் நிறப்பட்டுள்ளனர்.கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள் பலர் பணி சூழ்நிலை கருதி பல்வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டியிருந்தனர்.தற்போது மீண்டும் அவர்களைப் பழைய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான கலந்தாய்வு குறித்த தகவல் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும், ஒன்றிய அரசு நீட் தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை அனுப்பியவுடன் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெற்றோர்களிடம் அதிகப் பணம் வசூலிப்பதைத் தடுக்க புதிய நடவடிக்கை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.என கூறிய அவர் இந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஒட்டுமொத்த கட்டணங்களையும் அரசிடமே நேரடியாக செலுத்தலாம், கல்லூரியில் செலுத்தத் தேவையில்லை என கூறினார்.