தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பல காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே இடைநிற்றல் செய்து விடுகின்றனர். இதனால் இடை நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கும் நோக்கில், அரசு பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் பள்ளி இடைநீற்றல் குறித்த காரணங்கள் கேட்டறியப்பட்டு மீண்டும் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதம் நான்காவது வாரத்தில் குடியிருப்பு பகுதி வாரியாக பள்ளி செல்லும் குழந்தைகள் கள ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.