fbpx

மாணவர்களே..!! தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் தொடர்ந்து விடுமுறைகள் வருவதால், பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து, அக்டோபர் 9ஆம் தேதியும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டனர்.

இந்நிலையில், நிலையில் சமீபத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை எவ்வாறு முடிப்பது என்று ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதிகபட்சமாக 2 நாட்கள் மட்டுமே விடுமுறை இருக்கலாம என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

ஹெட்ஃபோன்கள் மூலம் இதயத் துடிப்பை அளக்கும் கூகுள்!…

Mon Oct 30 , 2023
சென்சார்கள் சேர்க்காமல், பேட்டரி ஆயுளைக் குறைக்காமல் கேட்கக்கூடிய சாதனங்களைக் கொண்டு இதயத்துடிப்பை அளக்கும் ஹெட்ஃபோன்களை கூகுள் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கூகுள் விஞ்ஞானிகள் ஆடியோபிளெதிஸ்மோகிராபி (APG)ஐ வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர், இது இதயத் துடிப்பை அளவிட அல்ட்ராசவுண்ட் பயன்படுத்துகிறது, கூடுதல் சென்சார்கள் சேர்க்காமல் அல்லது பேட்டரி ஆயுளைக் குறைக்காமல் கேட்கக்கூடிய சாதனங்களைக் கொண்டு இதயத்தைக் கண்காணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சுமார் 153 பேரை கொண்டு 2 முறை நடத்தப்பட்ட ஆய்வில், APG தொடர்ந்து […]

You May Like