பள்ளி மாணவர்களை பார்க்கும் போது என் இளமை எனக்கு திரும்புகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில்100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா, அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா, 67வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா என ஐம்பெரும் விழா பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிர்த்து.
இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வி நிகச்சியில் எப்போது நான் ஆர்வத்துடன் கலந்துகொள்வேன் என்றும், பள்ளி மாணவர்களை பார்க்கும் போது என் இளமை எனக்கு திரும்புகிறது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு மிகவும் உதவுவதாக, மாணவிகள் மகிழ்ச்சியாக கூறினர். அதே மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதால் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குகிற “தமிழ்ப்புதல்வன்” கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதாக கூறினார்.
மேலும், தற்போது நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில், அன்பில் மகேஷ் கவனிப்பில் பள்ளிகளைவித்துறை பொறக்காலாத்தை நோக்கி முன்னேறி வருகிறது என பெருமையோடு சொல்லலாம்.மேலும் உலக தரத்துக்கு தமிழக பள்ளிகவித்துறையை முன்னேற்ற துடிக்கும் அமைச்சகருக்கு உறுதுணையாக இருப்பது நமது ஆசிரியர்கள் தான். அந்த ஆசிரியர்களை பாராட்ட்ட வேண்டியது அரசினுடைய கடமை என்றும் தெரிவித்தார்.