fbpx

திருச்சி: கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!! 4 மாணவர்கள் கைது.!

திருச்சி அருகே கண்ணன் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆதார் படுத்தியிருக்கின்றனர்.

கண்ணனூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றிருக்கிறது. அப்போது மேடை அருகே நின்று கொண்டிருந்த மூன்றாம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவன் பவித்ரனை கீழே இறங்குமாறு பேராசிரியர் அறிவுறுத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் முகிலன் மாலை பணி முடிந்து வீடு திரும்பும் வேலையில் மது போதையில் இருந்த மாணவன் ஆசிரியருடன் தகராறில் ஈடுபட்டு இருக்கிறான்.

இதனையடுத்து மாணவனின் ஐடி கார்டை வாங்கிக்கொண்டு ஆசிரியர் சென்றிருக்கிறார். இதனால் பாத்திரமடைந்த மாணவன் தனது நண்பர்களான ஜீவா பிரதீஷ் மற்றும் கபிலன் ஆகியோருடன் இரவு 8 மணி அளவில் கல்லூரிக்கு வந்து பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து கல்லூரி சுவற்றில் வீசியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் முசிறி காவல்துறை டிஎஸ்பி யாஸ்மின் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்களான பவித்ரன் கபிலன் பிரதீஷ் மற்றும் ஜீவா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Post

தமிழக பாஜக: முக்கிய தலைவர்கள் முடிவால் கலக்கத்தில் தொண்டர்கள்.! வெளியான அதிர்ச்சி காரணம்.!

Fri Feb 16 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வடமாநிலங்களில் அசுர பலத்துடன் இருக்கிறது. எனினும் தென் மாநிலங்களில் அந்த கட்சியின் நிலைமை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பாஜக தற்போது தெலுங்கானா ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அந்த […]

You May Like