fbpx

மாணவர்களே!… 10ம் வகுப்பு ரிசல்ட் வருவதற்கு முன்பே முக்கிய அறிவிப்பு!

Special Classes: 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ம் தேதிமுதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்றுகாலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்தநிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து செயல்படுத்தும் ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் மூலம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களைக் கண்டறிந்து, மே.13 முதல் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாடவாரியாக ஆசிரியர் வல்லுநர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM) மற்றும் வினாத்தாள், துணைத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்புப் பயிற்சி மையம் மாணவர்கள் முன்னதாக பயின்ற பள்ளியிலேயே நடைபெறும்.

மேலும், இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் பாடம் சார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, பயிற்சி வழங்கவும் மற்றும் சனிக்கிழமைகளில் வாராந்திரத் தேர்வு நடத்தவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இச்சிறப்பு பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் வாராந்திர தேர்வு மதிப்பெண்கள் கல்வி தகவல் மேலாண்மையின் (EMIS) மூலம் கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து மாணவர்களை ஊக்குவித்து, அவர்களைத் துணைத் தேர்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

மேலும், 14417 என்ற உதவி எண் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, உரிய வழிகாட்டுதலுடன் தொடர்ந்து மாணவர்களைச் சிறப்புப் பயிற்சி மையத்தில் கல்வி கற்பதையும், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கச் செய்து மற்றும் துணைத் தேர்வு எழுதும் வரை ஊக்குவிப்பதையும் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: இந்தியாவில் எந்தெந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா..? அட இந்த இறைச்சிக்கும் தடையா..?

Kokila

Next Post

உங்கள் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கா..? இந்த விஷயத்தை உடனே பண்ணுங்க..!! இல்லையென்றால் கிடைக்காது..?

Fri May 10 , 2024
இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், அவர்களது வங்கிக் கணக்கிற்கு மானியத் தொகை செலுத்தப்படுகிறது. மேலும், ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 41 லட்சம் இலவச பயனாளிகள் என மொத்தம் 2.33 கோடி வாடிக்கையாளர்கள் […]

You May Like