கியூட் பிஜி தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் (CUET UG) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் கலை சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்காக இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில், தமிழ் மற்றும் ஆங்கில முற்பட 13 இந்திய மொழிகளில் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.