fbpx

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களே..!! இன்று முதல் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!! தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவிப்பு..!!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. எனவே, தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தனித்தேர்வர்கள் இன்று (டிசம்பர் 6) முதல் டிசம்பர் 17ஆம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுகால அட்டவணை, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும்” என்று தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நெருப்பு பந்தாக மாறும் பூமி..!! இந்த பிரச்சனைகளை சமாளித்தால் உலகம் அழிவதை தடுக்கலாம்..? ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு..!!

English Summary

It has been announced that students writing the 10th, 11th and 12th grade public examinations and those taking the private examinations can apply from today.

Chella

Next Post

பரபரக்கும் அரசியல் களம்..!! இன்று அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடும் விஜய்..!! என்ன பேசப் போகிறார்..? உற்று கவனிக்கும் எதிர்க்கட்சிகள்..!!

Fri Dec 6 , 2024
The book "Ambedkar, the Leader for All" is being published in Chennai today.

You May Like