fbpx

’மாணவர்களின் P.E.T. வகுப்புகளை ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள்’..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு..!!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழக அரசு சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பள்ளி மாணவர்களின் P.E.T பீரியட் வகுப்புகளை கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காமல் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளை கூட மாணவர்கள் விளையாட்டுக்காக அனுமதிக்கலாம் என்றும், அதன் மூலம் மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்றால் அரசு பள்ளிகளுக்கு அதிக கேடயங்கள் கிடைக்கும்” என கூறினார்.

இதையடுத்து, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், 114 அரசு பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது என்றும், கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 180 அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்ப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Chella

Next Post

மக்களே உஷார்..!! உங்களை இப்படியும் ஏமாற்றுவார்கள்..!! வங்கிக் கணக்கை பத்திரமா பாத்துக்கோங்க..!!

Tue Nov 14 , 2023
போலி கூரியர் நிறுவனத்தின் பெயரில் இணையதளம் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய கும்பல் தற்போது பிடிபட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல போலி இணையதளங்களை உருவாக்கி, சைபர் குற்றவாளிகளுக்கு தரவுகளை விற்றுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் டிஎம்டி கம்பிகளை உலக நாடுகளுக்குக் கொண்டுசேர்க்கும் விநியோகஸ்தர்களாக காட்டிக்கொண்டு, போலியான கூகுள் விளம்பரங்களை உருவாக்கி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டெல்லியில் உள்ள சுமார் 100 தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர். பீகாரில் […]

You May Like