தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து உள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இருக்கின்ற ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் பங்கேற்றுக் கொள்ள உள்ளனர்.
அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இந்த விழாவை முன்னிட்டு மாணவர்கள் எல்லோரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர் கேளம்பாக்கம் வழியே வந்து நீலாங்கரையை சென்றடையும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் ஆண்டவருக்கு வருகை தர தொடங்கி இருக்கிறார்கள். விஜயை சந்தித்து பரிசு தொகையும் பெற இருக்கின்றோம் என்ற உற்சாகத்தில் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மாதவரம் தொகுதியிலிருந்து வந்த ஹெர்பியா 590 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாகவும் விதையை சந்திக்க இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இது போன்று பல்வேறு மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களையும் நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ள மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.