fbpx

’மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது’..!! கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு..!! மீறினால் ஆக்‌ஷன்..!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வாங்க கூடாது என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நடந்து வரும் நிலையில், அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. பள்ளிகளில் ஏற்கனவே அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதேபோல் கல்லூரிகளிலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது. இந்த முறை 12ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் பலரும் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்

அதன்படி கடந்த மாதம் 8ஆம் தேதியில் இருந்து 3 வாரமாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பிக்க கடந்த 22ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது. முதலில் 19ஆம் தேதி இந்த விண்ணப்பம் நிறைவடைவதாக இருந்தது. ஆனால், மாணவர்கள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் இந்த விண்ணப்பங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 22ஆம் தேதியோடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து tngasa.in என்ற தளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அதன்பின் கடந்த மாதம் 25ஆம் தேதி தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இதையடுத்து, கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடக்கும். ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 2ஆம் கட்ட கலந்தாய்வு நடக்கும். ஜூன் 22ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வாங்க கூடாது என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும், மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு தனிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. எனவே, பார்வையில் குறிப்பிடப்பட்ட அரசாணைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் பலரும் அடுத்து என்ன செய்யலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று ஆலோசனை செய்து வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு எங்கே படிப்பது, எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை.

இந்நிலையில்தான் இவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எங்கே சேர வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று பல படிநிலையில்களில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

Chella

Next Post

பட்டப்பகலில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் படுகொலை…..! திண்டுக்கல் அருகே பரபரப்பு…..!

Wed Jun 7 , 2023
திண்டுக்கல் மாவட்டம் வி எம் ஆர் பட்டி ரோமன் மிஷின் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (65) இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில், இருவரும் திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர் சென்ற 10 வருடங்களுக்கு முன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, மனம் அந்தோணி வீட்டை […]

You May Like