fbpx

”மாணவர்களே இனி இப்படித்தான் எழுத வேண்டும்”..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்திருந்த உத்தரவில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் இனிஷியல் மற்றும் பெயரைத் தமிழில் தான் எழுத வேண்டும். இதுபோல், அரசு விழா, சுற்றறிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். இதை முதன்மை கல்வி அலுவலர்கள், தங்களது பகுதி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

”மாணவர்களே இனி இப்படித்தான் எழுத வேண்டும்”..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கையொப்பத்தையும் தமிழில் இட வேண்டும் எனவும் வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாணவி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்..! ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்..!

Tue Aug 23 , 2022
கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, மாணவி இறப்புக்கு நீதி கேட்டு 17ஆம் தேதி பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி முன் […]
மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

You May Like