fbpx

’தமிழ்ப்புதல்வன்’ திட்டம்..!! உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்க இதையெல்லாம் பத்திரமா வெச்சிக்கோங்க..!!

வங்கிக் கணக்கில் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சாதி, மதம் பொருளாதாரம், சமுதாயச் சூழல் என எதுவுமே ஒருவரின் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. கல்விதான் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாத சொத்து. படிப்பு படிப்பு இது மட்டும்தான் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுவரைக்கும், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு வரக்கூடிய மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுபோல மாணவர்களுக்கும் ரூ.1,000 வழங்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி வைக்கப் போகிறேன். திராவிட மாடல் அரசு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு ஆதார் அட்டை, ஆதார் அட்டை இணைக்கப்பட்ட ஜாயிண்ட் வங்கிக் கணக்கு, அரசுப் பள்ளியில் படிப்பதற்கான ஆவணங்களை கையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : நீங்க யூடியூப் சேனல் வெச்சிருக்கீங்களா..? இனி மொத்தமாக மாறப்போகுது..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

English Summary

Chief Minister Mukherjee Stalin will inaugurate the ‘Tamilpattullavan’ scheme in Coimbatore on August 9, which will provide students with Rs 1,000 in bank accounts.

Chella

Next Post

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! இந்த தேதி தான் கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Aug 6 , 2024
The Directorate of Health has announced that those who have not added their name in the birth certificate for 15 years can add their name before the end of this year.

You May Like