உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள மீரட்டில் அமைந்து இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியையிடம் சில மாணவர்கள் அநாகரீகமாக நடந்தும், பல தவறான கருத்துகளை தெரிவித்தும் வந்துள்ளனர். மேலும், அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட அந்த வீடீயோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சம்மந்தப்பட்ட பள்ளியின் பணிபுரிந்த 27 வயதான ஆசிரியையை 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிலர் நீண்ட காலமாக தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக அந்த பெண் ஆசிரியை குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த கிதாவுர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட ராத்னா இனயத்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு பள்ளியில் தான் இத்தகைய கொடுமைகள் அரஙகேறி இருக்கின்றன.
பள்ளியின் உள்ளே மாணவர்கள் தன்னிடம் காதலை சொல்லியதால், வரம்பு மீறுவதாக ஆசிரியை மாணவர்களை எச்சரித்துள்ளார். அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த மாணவர்கள் அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர்.மேலும், அந்த ஆசிரியை பற்றி அவதூறாக முகம் சுளிக்கும் வகையில் பேசி மற்றொரு வீடீயோவும் எடுத்துள்ளனர்.
இந்த 2 வைரலான வீடியோக்களை அடிப்படையாக கொண்டு 16 வயதுடைய 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.