fbpx

TNPSC முக்கிய அறிவிப்பு…! ராணுவக் கல்லூரியில் படிக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு முறைகளில் நடத்தப்படுகிறது.

எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்களை கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியவற்றுக்கு ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும்.

இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாட்கள் தொகுப்பை ”கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003” என்ற முகவரிக்கு காசோலை அனுப்பி அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணையவழி செலுத்தி (பொது பிரிவினர் ரூ.600/- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555/-) பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை – 600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், இத்தேர்வு குறித்த மற்ற விவரங்களை ராஷ்ட்ரிய இந்திய கல்லூரியின் இணையதளத்தில் www.rimc.gov.in-ல் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

சூப்பர் நியூஸ்...! 9 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை...! யாரெல்லாம் இதற்கு தகுதி...?

Sat Mar 25 , 2023
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சகம் 2 உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்துகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உதவித்தொகை திட்டம் அதில் ஒன்றாகும். மற்றொன்று பேகம் ஹசரத் மஹல் திட்டமாகும். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் பிரதமரின் கல்வி அதிகாரம் அளித்தல் […]
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..!! இன்றே கடைசி நாள்..!! உடனே முந்துங்கள்..!!

You May Like