தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டது. இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதியும் தொடங்க உள்ளது.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக மாதிரி வினாத்தாள் தொகுப்பு தேர்வு துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என தெரிந்து கொள்ளலாம். மேலும், எப்படி கேள்விகள் மற்றும் எப்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என மாணவர்கள் இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.