fbpx

சூப்பர் வாய்ப்பு…! நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம்…! எப்படி விண்ணப்பிப்பது…?

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் (Freezer) குளிர்விப்பான (Cooler) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50% (விழுக்காடு) அல்லது ரூ.3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

Vignesh

Next Post

பரபரப்பு...! 10,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்... அதிமுக முன்னாள் அமைச்சரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை நேரில் விசாரணை...!

Mon Nov 6 , 2023
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று விசாரணை நடைபெறும். அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகனுக்கு எதிராக 10,000 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த மே மாதம் டிவிஏசி தாக்கல் செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, இது முதலில் ரூ.11,32,95,755 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது, பின்னர் விசாரணையின் போது, அசையும் மற்றும் […]

You May Like