மிகவும் குறைந்த செலவு விகிதத்துடன் இந்திய தொலைத் தகவல் வலைப்பின்னல் இப்போது உலகிலேயே இரண்டாவது பெரியதாக உள்ளது. மோடி அரசின் சந்தைக்கு உகந்த கொள்கைகளால் இந்த வளர்ச்சி ஊக்கம் பெற்றுள்ளது என்று மத்திய இணையமைச்சர் தேவுசின் சௌஹான் தெரிவித்தார். தொழில்துறைக்கு “எளிதாக வணிகம் செய்தல்”, ஊரகம் மற்றும் தொலைதூர பகுதிகளில் வாழ்வோரையும் உள்ளடக்கி அனைத்து மக்களுக்கும் “வாழ்க்கையை எளிதாக்குதல்”, “தற்சார்பு இந்தியா” என்ற 3 தூண்களின் அடிப்படையில் நரேந்திர மோதி தலைமையின் கீழ், தொலைத் தகவல் தொடர்பு துறையில் இந்தியாவின் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சீர்திருத்தங்கள் ஆரோக்கியமான போட்டியை மேம்படுத்துவதாக, நுகர்வோர் நலனை பாதுகாப்பதாக, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதாக, முதலீட்டுக்கு ஊக்கமளிப்பதாக, தொலைத் தகவல் தொடர்பு சேவை முன்னுரிமை மீதான ஒழுங்குமுறை சுமையை குறைப்பதாக இருக்கின்றன என்றார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, “தொலைத் தகவல் தொடர்புத் துறையின் ஒழுங்குமுறை மற்றும் கொள்கை அம்சங்கள்” என்ற மையப் பொருளுடன் மண்டல தரப்படுத்துதல் அமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 2022 இன்று முதல் 12 வரை சர்வதேச தொலைத் தகவல் தொடர்பு சங்கத்தின் ஆசியா – ஓஷியானா மண்டல பிரிவு ஆய்வுக்குழு 3-ன் 4 நாள் கூட்டம் நடைபெறும்.