fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்..!! பணம் கொட்டப்போகுது..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியம் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி கடந்த மார்ச் 12ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் அகவிலைப்படி 50%ஆக உயர்ந்தது. இது கடந்த ஜனவரி 1ஆம் தேதி கணக்கிட்டு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அகவிலைப்படி 50%-க்கும் மேல் உயரும் போது, ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, விடுதி மானியம் ஆகியவை தானாகவே 25% உயர்த்தப்படும்.

அதன்படி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை மாதம் ரூ. 2,812.5 ஆகவும், விடுதி மானியம் மாதம் ரூ. 8,437.5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஊனமுற்ற குழந்தைகளுக்கு இரு மடங்காக மாதம் ரூ.5,625 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு உதவித்தொகை மாதம் ரூ.3,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவைகளும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நவோதயா வித்யாலயா பள்ளிகளில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கு மேல்..!!

Chella

Next Post

”பேய் மழை.. உடைந்தது அணை”..!! ஊருக்குள் புகுந்த தண்ணீரால் 120-க்கும் மேற்பட்டோர் பலி..!! கென்யாவில் சோகம்..!!

Tue Apr 30 , 2024
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. வெள்ளம் நீர் சூழ்ந்து குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால், கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். இதற்கிடையே, […]

You May Like