Shubman Gill: ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2500 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் விரைவாக ரன் சேர்த்தார். 102 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் கில். ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், விராட் கோலி 52 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 என்கிற சவாலான ரன்னை குவித்தது. 34.2 ஓவர்கள் தாக்கு பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சதம் அடித்த சுப்மன் கில், இது அவரது ஏழாவது ஒருநாள் போட்டி சதமாகவும், 13வது சர்வதேச சதமாகவும் அமைந்தது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் செய்த சாதனைகளை இங்கே பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் 2,500 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2,500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். முன்னதாக, தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 51 இன்னிங்ஸ்களில் 2,500 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2500 ரன்கள் எடுத்த வீரர்கள்:
50 இன்னிங்ஸ்கள் விளையாடி சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார், 51 இன்னிங்ஸ் – ஹாஷிம் அம்லா 2ம் இடம், 52 இன்னிங்ஸ் – இமாம்-உல் ஹக் 3ம் இடம், 56 இன்னிங்ஸ் – விவியன் ரிச்சர்ட்ஸ் 4ம் இடம், 56 இன்னிங்ஸ் – ஜோனாதன் ட்ராட் 5வது இடத்தில் உள்ளார்.
ஒரே மைதானத்தில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்கள் பட்டியல் – ஃபாஃப் டு பிளெசிஸ் – ஜோகன்னஸ்பர்க், டேவிட் வார்னர் – அடிலெய்டு, பாபர் அசாம் – கராச்சி, குயின்டன் டி காக் – செஞ்சுரியன், சுப்மன் கில் – அகமதாபாத் . 7 ஒருநாள் போட்டி சாதனைகளை விரைவாக எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் 50 இன்னிங்ஸ் விளையாடி சுப்மன் கில் முதலிடத்திலும் 54 இன்னிங்ஸ்களுடன் ஷிகர் தவான் 2வது இடத்திலும் உள்ளனர்.
தனது 50வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் சுப்மன் கில் செய்துள்ளார். இதற்கு முன் எந்த இந்திய வீரரும் தனது 50வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தது இல்லை. அதேபோல, விரைவாக ஏழு ஒருநாள் போட்டி சதங்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஷிகர் தவானின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
50 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியல் – சுப்மன் கில் – 2587 ரன்கள், ஹாஷிம் அம்லா – 2486 ரன்கள், இமாம்-உல்-ஹக் – 2386 ரன்கள், ஃபகார் ஜமான் – 2262 ரன்கள், ஷாய் ஹோப் – 2247 ரன்கள். 2022ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல் – ஜோ ரூட் – 13 சதங்கள், 92 இன்னிங்ஸ், 3942 ரன்கள் சுப்மன் கில் – 13 சதங்கள், 108 இன்னிங்ஸ், 4451 ரன்கள் பாபர் அசாம் – 11 சதங்கள், 135 இன்னிங்ஸ், 5359 ரன்கள் ட்ராவிஸ் ஹெட் – 11 சதங்கள், 107 இன்னிங்ஸ், 4464 ரன்கள் விராட் கோலி – 11 சதங்கள், 114 இன்னிங்ஸ், 4131 ரன்கள்.
Readmore: சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?. நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!