fbpx

அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைகள்!தீவிரவாதிகள் தாக்குதலில் 10 போலீஸ் பலி!… பாகிஸ்தானில் பயங்கரம்!

பாகிஸ்தானில் காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர்.

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணம், தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது, தீவிரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் எலைட் படையை சேர்ந்த 6 போலீசாரும் அடங்குவர். முந்தைய ஆண்டு நடைபெற்ற பல தாக்குதல்களை கருத்தில் கொண்டு, உள்ளூர் போலீசாருக்கு ஆதரவாக அப்பகுதியில்எலைட் போலீஸ் பிரிவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தினர். இரண்டரை மணி நேரத்திற்கும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kokila

Next Post

இன்னும் ஆதாருடன் பான் கார்டு இணைக்கவில்லையா?… மக்களவையில் வெளியான தகவல்!

Tue Feb 6 , 2024
பான் கார்டு ( Pan Card) மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை. பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும் ஆகும். இந்த கார்டு வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. எனவே இந்த பான் கார்டை ஆதாருடன் இணைப்பது […]

You May Like