நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
வாரிசு திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பணிகள் முடிவடையாததால் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று மாலை வெளியான வாரிசு டிரைலர் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.