fbpx

கோயிலில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவமா..? பெண்கள் உடை மாற்றும் அறையில் சிசிடிவி..!! செல்போனில் கொட்டிக் கிடந்த வீடியோக்கள்..!!

கோயிலில் பெண்கள் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா வைத்து வீடியோ எடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத்நகர், கங்கா நகர் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெண்கள், ஆண்கள் உடை மாற்றும் அறை தனித்தனியாக உள்ளது. இந்நிலையில், பெண்கள் உடை மாற்றும் அறையில் சமீபத்தில் சிசிடிவி கேமரா கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மகத் முகேஷ் என்பவரின் செல்போனில் சிசிடிவி கேமரா நேரலைக்கான செயலி இருந்தது கண்டறியப்பட்டது. அவரின் செல்போனை சோதனை செய்தபோது பல பெண்கள் உடை மாற்றும் வீடியோ சிக்கியது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மகத் முகேஷ்-க்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : தங்கம் விலை திடீரென குறைய என்ன காரணம்..? வரும் காலங்களில் எப்படி இருக்கும்..? ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு தகவல்..!!

English Summary

The police arrested the person who recorded the video with a CCTV camera in the women’s changing room in the temple.

Chella

Next Post

அனுமதியின்றி தடுப்பணை கட்டும் பணிகள்..! பசுமை தீர்ப்பாயம் வைத்த குட்டு..! அப்படியே ரிவேர்ஸ் எடுத்த கேரளா அரசு…!

Sat May 25 , 2024
Blocking works without permission..! Kuttu put by the Green Tribunal..! The Kerala government took reverses...!

You May Like