வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த வகையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்துவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும், தற்பொழுது உள்ள குழந்தைகள் செல்போன் இல்லமால் சாப்பிடுவது கூட இல்லை. அடம்பிடித்து எப்படியாவது செல்போனை பெற்றோரிடம் இருந்து வாங்கிவிடும். அந்த அளவிற்கு நம் வாழ்வில் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது.
அப்படி இருக்கும் இந்த காலகட்டத்தில், திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடுவதைத் தடுப்பதற்காகவும், சாதி மறுப்பு திருமணம் போன்றவை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குஜராத் தாக்கூர் சமூகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், குஜராத் தாக்கூர் சமூகம் திருமணங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்களையும் கொண்டுள்ளது. அதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணத்தை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திருமண விழாக்களில் DJ பார்டிகள் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.