சூடான் நாட்டில் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 1,800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என அரசு விளக்கம் அளித்துள்ளது. கலவரக்காரர்கள் மருத்துவமனைகள் சூறையாடியதால் மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்த கலவரம் காரணமாக நிலவரம் மேலும் தீவிரமடைந்தது.
சூடானின் நிலைமை மிகவும் “பதட்டமாக” இருப்பதாகவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது , சூடானின் முன்னேற்றங்களை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார். நிலைமை தொடர்ந்து பதட்டமாக உள்ளது. தனிநபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது