பாஜகவுடன் நேற்று நடைபெற்ற முதற்கட்ட தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று வருவதாக சொல்லிவிட்டு ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பாஜக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் தரப்புடன் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, பாஜக தரப்பில் இருந்து ஒரு தொகுதி ஒதுக்குவதாக சொல்வதால் தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற ஓபிஎஸ் அணியின் தொகுதி பேச்சுவார்த்தை குழு ஆலோசனையில், தாங்கள் கேட்கும் தொகுதிகள் தரப்படாததால், வெளியில் இருந்து ஆதரவு தரலாமா எனவும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.