’இனி அவ்ளோ தான்’..!! கடும் அதிருப்தியில் சீமான் எடுத்த முடிவு..!! வேட்பாளர்கள், முக்கிய பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனை..!!

நாம் தமிழர் கட்சி சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சி வேட்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த சீமான், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் கட்சியின் கரும்பு விவசாய சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த மற்றொரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக சீமான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 3 சின்னங்களை கொடுத்து அதில் ஒரு சின்னத்தை தேர்வு செய்து போட்டியிடுமாறு கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது. அதில் எந்த சின்னத்தை தேர்வு செய்யலாம் என சீமான் தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மகாலில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் 40 வேட்பாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மறுநாள் பல்லாவரம், துரைப்பாக்கம் சாலையில் நடக்கும் கூட்டத்தில், ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் சீமான், கட்சியின் சின்னத்தையும் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Rain | தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..!! 26ஆம் தேதி வரை மழை..!! வானிலை மையம் தகவல்..!!

Chella

Next Post

AI செவிலியர்கள் அறிமுகம்!.. வீடியோ கால் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை!

Thu Mar 21 , 2024
AI: ஹிப்போக்ரடிக் நிறுவனம் NVIDIA உடன் இணைந்து வீடியோ கால் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் AI செவிலியர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெல்த்கேர் உடன் தொழில்நுட்பத்தை இணைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் NVIDIA, ஹிப்போக்ரடிக் இணைந்து AI செவிலியர்கள் அறிமுகப்படுத்துகிறது. இது மனித செவிலியர்களின் செலவில் ஒரு பகுதியிலேயே சேவைகளை வழங்குவதாகவும் வீடியோ அழைப்புகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதாலும், சுகாதாரத்துறையில், பெரிய கேம் – சேஞ்சராக உருவெடுத்துள்ளது. […]

You May Like