fbpx

’சமூக நல வாரியம் திடீர் கலைப்பு’..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

ஒன்றிய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோரின் பிரச்சனைகளை களைவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்தில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைப்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

’சமூக நல வாரியம் திடீர் கலைப்பு’..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் என்.வி.என்.சோமு, சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி உள்ளிட்ட 10 பேர் இத்திட்டத்திற்கு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கைம்பெண்கள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில்முனைவோர்கள், பெண் விருதாளர்களும், வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

’இனி வாழ்க்கை பயணத்தை ஒன்றாக தொடங்குவோம்’.! ஒருவழியாக அமீருக்கு ஓகே சொன்ன பாவனி.!

Tue Sep 6 , 2022
பிபி ஜோடியில் வெற்றி பெற்ற பின் இன்ஸ்டாகிராமில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ள பாவனி, அதில், தனது காதலையும் சொல்லியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பாவனி-அமீர் ஜோடி டைட்டிலை வென்றது. பிபி ஜோடிகளின் சீசன் 2-வில் ஆர்த்தி – கணேஷ், அபிஷேக் – நாடியா சங், சுஜா – […]
’இனி வாழ்க்கை பயணத்தை ஒன்றாக தொடங்குவோம்’.! ஒருவழியாக அமீருக்கு ஓகே சொன்ன பாவனி.!

You May Like