fbpx

#Breaking : ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் உயிரிழப்பு.. பஞ்சாபில் பரபரப்பு..

பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலை 4.30 மணிக்கு நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. விரைவு நடவடிக்கை குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமில் அதி தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.. அந்த முகாமில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் மற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.. துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Maha

Next Post

ஒரே நாளில் ரூ.400 உயர்ந்த தங்கம் விலை.. கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்...

Wed Apr 12 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]
தங்கம்

You May Like