fbpx

ஐரோப்பாவுக்கு செல்லும் எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு.. வெளிநாட்டு சதி என்று குற்றம்சாட்டும் ரஷ்யா..

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் ‘நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2’ எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து, புடினின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.. எனினும் எதையும் பொருட்படுத்தாத ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனிடையே பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்தது. எனினும், அந்த குழாய்களில் எரிவாயு தேங்கி இருக்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் வகையில், கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்களில் 4வது முறையாக சில பகுதிகளில் கசிவு ஏற்பட்டுள்ளது.. நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட திடீர் கசிவுக்கு வெளிநாட்டு அரசுகளின் சதி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது..

ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும், இது அவசர விசாரணை தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு பல நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. ஒரு அரசின் தலையீடு இல்லாமல் இதுபோன்ற பயங்கரவாத செயல் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் பல நாடுகளும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றன. கசிவுகளுக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறதா என்று கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதிலளிக்காமல் இருந்தார்” என்றார்.

ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு வல்லரசுகளும் இந்த சதிச் செயல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளன. கசிவுகள் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது. இப்போதைய சூழலில், ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் ‘நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2’ குழாய்கள் மூடப்பட்டுள்ளன.

Maha

Next Post

மாணவர்களை கரும்புகளால் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!

Fri Sep 30 , 2022
6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர், மாணவர்களை […]
மாணவர்களை கரும்புகளால் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!

You May Like