fbpx

பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம்..!! உருகி உருகி எழுதிய பிரேமலதா விஜயகாந்த்..!! என்ன காரணம்..?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக அளவிலான அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி, இந்திய அளவில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், பிரதமர் மோடியும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதும் உங்களுக்கும் விஜயகாந்த்துக்கும் இடையேயான நட்பு வரலாற்றில் பொறிக்கப்படும். அவருக்கு புகழாரம் சூட்டிய உங்களுக்கு எங்களது குடும்பத்தினர் நன்றிக்கடன் பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மகளிர் உரிமைத்தொகை..!! மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு..!! வரும் 10ஆம் தேதியே ரூ.1,000..!!

Fri Jan 5 , 2024
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, 11.5 லட்சம் பேர் முறையீடு செய்த நிலையில், அதில் இரண்டு லட்சம் பேர் இந்த மாதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, […]

You May Like