fbpx

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தின் எதிரொலி ; கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு..!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் “கடின தரையிறக்கம்” செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்தது. ஆனால், அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு எதிர்பாராத பேரழிவு போன்ற பல காரணங்களால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என பல தளங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் – ஈரான் மத்தியில் கடுமையான பிரச்சனை நிலவி வரும் வேளையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பெரும் சர்ச்சையாக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். குறிப்பாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிங்மேக்கராக இருக்கும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நேரத்தில் பெரிதும் பாதிக்கப்படும்.

சர்வதேச சந்தையில் முக்கிய பென்ச்மார்க் எண்ணெய் ஆக இருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 32 சென்ட் (0.4%) அதிகரித்து $84.30 ஆக உயர்ந்தது. இது மே 10 ஆம் தேதிக்குப் பின்பு பதிவான அதிகபட்ச விலையாகும். இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 5 சென்ட் உயர்ந்து 80.11 டாலராக அதிகரித்தது. இது மே 1 ஆம் தேதிக்குப் பின்பு பதிவான அதிகபட்ச விலையாகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் WTI கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி-யின் மரணம் முக்கியமான காரணமாகும்.

Next Post

Entry கொடுத்த லாரி.. வெடித்த டீசல் டேங்க்! பதறிய பங்க் ஊழியர்கள்! திக் திக் CCTV காட்சி..!

Mon May 20 , 2024
தெலங்கானா மாநிலம், புவனகிரியில் பெட்ரோல் பங்கில் நுழைந்த லாரியின் டீசல்டேங்க் வெடித்து தீப்பற்றியது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலம், புவனகிரி புறநகர் பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் நேற்று ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த […]

You May Like