முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார். மணிகண்டன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது வீடியோக்கள், புகைப்படங்களை அழிக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்..
இதனிடையே நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பெங்களூரில் தலமைறைவாக இருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.. இதைத்தொடர்ந்து மணிகண்டனுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. எனினும் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், திடீர் திருப்பமாக மணிகண்டன் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக சாந்தினி கூறியிருந்தார்..
இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மணிகண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டார்.. இந்நிலையில் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.. மணிகண்டன் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி கூறியதை அடுத்து வழக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது..