தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.. ஓ
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, அந்த பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது..
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் முறையிட்டு வருகின்றனர்.. எனினும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பது தெரியவரும்..
இந்நிலையில் தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.. ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் எம்.பியுமான சையதுகான் தலைமையில் டிடிவி தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.. அமமுக கூட்டத்திற்காக தேனி சென்ற டிடிவி தினகரனுக்கு அம்மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.. அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வரும் சூழலில் இந்த வரவேற்பு முக்கியத்துவம் பெறுகிறது.. எனினும் ஓபிஎஸ் ஒப்புதலுடன் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை..