புஷ்பா 2 கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி, மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, படத்தின் 2-வது பாகம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. மேலும், படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.
அப்போது குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்தனர். பின்னர், அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், தாய் ரேவதி இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், அல்லு அர்ஜூனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆனால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிகழ்விற்கு முழுக்க முழுக்க அல்லு அர்ஜூனின் அகம்பாவம் தான் காரணம் என தெலங்கானா முதலமைச்சர் குற்றம்சாட்டினார். 10 திரையரங்கத்திற்கு மேல் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு கொடுக்க முடியாது என போலீசாரிடம் படக்குழுவிடம் தெரிவித்தும், அதை அல்லு அர்ஜுன் மீறியுள்ளார் என முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார். திரையரங்கை விட்டு வெளியேறினால் மட்டுமே தங்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என போலீசார் கூறியும், அதை ஏற்க அல்லு அர்ஜூன் மறுத்துவிட்டார்.
பின் ஏ.சி.பி மற்றும் டி.சி.பி இருவரும் சேர்ந்து அல்லு அர்ஜூன் வெளியேற வேண்டும் இல்லை என்றால் அவரது கைது செய்ய வேண்டியதாக இருக்கும் என்று கூறிய பின்னரே அவர் கிளம்பியதாக ரேவந்த் தெரிவித்திருந்தார். தற்போது இந்த நிகழ்வின் வீடியோவை தெலங்கானா காவல்துறை வெளியிட்டுள்ளது. ஒருபக்கம் சட்டப்பூர்வமாகவும் இன்னொரு பக்கம் மக்கள் எதிர்ப்பு என அல்லு அர்ஜூனுக்கு எதிராக திரும்பியபடி உள்ளது.
Read More : சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!