fbpx

திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்..!! 8 பேர் பரிதாப பலி..!! நடந்தது என்ன..?

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் சேடகான்-மிடார் சாலை உள்ளது. இந்த சாலையில் இன்று அதிகாலை பிக் அப் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையில் தவறாக ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அதன் மீது மோதிவிடாமல் இருக்க முற்பட்டபோது வாகனம் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் ஒரு தம்பதி மற்றும் அவர்களின் குழந்தை என ஒரு குடும்பமே பலியானதாக நைனிடால் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரஹலாத் நாராயண் மீனா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

14 வயது பள்ளி மாணவனை பாலியல் உறவுக்கு அடிமையாக்கிய ஆசிரியை..!! அதிரவைத்த சம்பவம்..!!

Fri Nov 17 , 2023
அமெரிக்காவில் 14 வயது பள்ளி மாணவனை, கவுன்சிலிங் தருவதாக கூறி, பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டு, பள்ளி ஆசிரியையே மாணவனை பாலியல் இச்சைக்கு அடிமையாக்கி, மன உளைச்சலுக்குள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பக்ஸ் கவுன்டி பகுதியில் உள்ள பென்ரிட்ஜ் சவுத் மிடில் பள்ளியில் கவுன்சிலிங் வழிகாட்டியாக கெல்லி ஆன் ஸ்கட் (35) என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கெல்லி அந்த பள்ளியில் உள்ள 14 […]

You May Like