டைப் 2 நீரிழிவு நோயாளிகள் நல்ல தூக்கம் இல்லாததால் கடுமையான உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் சில குறிப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்சுலின் பற்றாக்குறை காரணமாக உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது ஒரு தீவிர மருத்துவ நிலை, இதனால் நல்ல தூக்கம் வர தடை ஏற்படலாம். காலப்போக்கில், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் நல்ல தூக்கம் இல்லாததால் கடுமையான உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் வழிகாட்டுதல்களின்படி, மக்களுக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது. மேலும் இதுதொடர்பான சில குறிப்புகளை பார்க்கலாம்.
ஆல்கஹால் குளுக்கோஸை இரத்த ஓட்டத்தில் வெளியிட அனுமதிக்காது.மனித உடல் உட்கொள்ளும் ஆல்கஹால் முழுவதுமாக வளர்சிதை மாற்றத்திற்கு சுமார் இரண்டு மணிநேரம் ஆகும். நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் வழிகாட்டுதல்கள் தூங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்று அறுவுத்தப்படுகிறது. இதேபோல்,பகலில் உடற்பயிற்சி செய்வது இரவில் நன்றாக தூங்க உதவும். ஏனெனில் உடற்பயிற்சி உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இந்த வெப்பநிலை வேறுபாடு சோம்பல் உணர்வை உருவாக்கும். இது இறுதியில் தூங்குவதற்கு உதவும்.
மன அழுத்தத்தை சமாளிப்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இருப்பினும், வகை 2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிப்பது கடினமாக இருப்பதால், மன அழுத்தத்திற்கு அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். நாள்பட்ட மன அழுத்தம் நரம்பு மண்டலத்தின் தீவிரத்திற்கு வழிவகுக்கிறது. இது அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இது அமைதியற்ற உணர்வுகளை உருவாக்குகிறது.