fbpx

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பும் இடம் பெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த முறை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது மக்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விவசாயிகள், எதிர்கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் முழுக்கரும்பு இடம் பெறும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

மேலும், 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை  ஜனவரி 2ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 9ஆம் தேதிக்கு நிகழ்ச்சியானது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Chella

Next Post

பெற்றோர்களே உஷார்..!! வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் நைசாக பேசி...!! விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

Wed Dec 28 , 2022
விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் நூதன முறையில் பேசி நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கட்டிடப் பணிக்கு சித்தாள் வேலையாக உடன் சென்று வருவார். இவருடைய மகன் நவீன்ராஜ் (16) தும்பூரில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பும், […]

You May Like