fbpx

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு.. 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ முகாமில் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் இன்று சுட்டுக் கொன்றது. இந்த நடவடிக்கையில் 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து, என்கவுன்டர் நடந்தது.. இதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். என்கவுண்ட்டர் தற்போது முடிவடைந்துள்ளதாக இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. ராணுவ அதிகாரி உள்ளிட்ட காயமடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. என்கவுண்ட்டர் நடைபெற்ற இடத்தை ராணுவ வீரர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்..

ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் முகேஷ் சிங் பேசிய போது “ரஜோரியின் தர்ஹால் பகுதியில் உள்ள பர்கலில் உள்ள ராணுவ முகாமின் வேலியை யாரோ கடக்க முயன்றனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. கூடுதல் ராணுவ வீரர்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.” என்று தெரிவித்தார்..

ரஜோரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள் ராணுவ நிறுவனத்தின் செயல்பாட்டு தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர், மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்..” என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று புட்கம் மாவட்டத்தில் மூன்று லஷ்கர் இடி பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர், பொதுமக்கள் ராகுல் பட் மற்றும் அம்ரீன் பட் ஆகியோரைக் கொன்றதில் தொடர்புடையவர் ஆவார்..

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது, மேலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே உஷார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..! எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா..?

Thu Aug 11 , 2022
ஓணம் பண்டிகையை முன்னிட்டு 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 1ஆம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும். பின்னர், அங்கிருந்து செப்டம்பா் 2ஆம் தேதி மாலை 3.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 3 […]

You May Like