சென்னையில் இரண்டு ரவுடிகள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண். இவரும் இவரது நண்பரான படப்பை சுரேஷும் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மதுபோதையில் படுத்துக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அருணையும், படப்பை சுரேஷையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
இதில், படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அருணை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அருணின் காதலியை சுக்கு காபி சுரேஷ் என்ற ரவுடி வெட்டிக் கொன்றுள்ளார்.
அதற்கு பழி தீர்ப்பதற்காக அருண் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையறிந்த சுக்கு காபி சுரேஷ் அருணையும் அவரது அண்ணன் அர்ஜுனையும் கொல்வதற்காக வந்துள்ளனர். ஆனால், அருணுடன் சேர்ந்து அர்ஜுனன் எனக் கருதி படப்பை சுரேஷை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : இன்று முதல் 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு முகாம்…!