தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் ஆரம்பமானாலும் கோடையில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் திருச்சியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாகவே இருக்கிறது கடந்த மே மாதம் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டியது. கடந்த கோடை காலங்களை விடவும் இந்த முறை வெப்பத்தின் அளவு அதிகமாகியுள்ளது.
ஆனால் தற்போது மே மாதம் முடிந்துவிட்ட நிலையில், சென்ற மாதத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் இந்த ஜூன் மாதத்தில் அதுவும் குறைந்து காணப்படுகிறது. திருச்சியில் அக்னியின் தாக்கம் முடிவடைந்த பின்னரும் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. அந்த வெயில் தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது.
கடந்த சில தினங்களாக திருச்சியில் 103 டிகிரி வெப்பநிலை பதிலாக இருந்தது. நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி 100 டிகிரி என்ற அளவைவிட குறைவான வெப்பம் பதிவாகி இருந்தது. அதோடு இன்று இந்த வெப்பநிலை மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.