fbpx

கூலி படத்துக்கு ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. வெளியான அட்டகாசமான அப்டேட்..!! ரசிகர்கள் ஹேப்பி..

சூப்பர் ஸ்டார் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் தொடர்பான அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில், தங்க குடோனுக்குள் அதிரடியாக நுழையும் ரஜினி, அடியாட்களை துவம்சம் செய்து மிரட்டலாக பஞ்ச் வசனம் பேசுவதோடு, படத்தின் தலைப்பு ‘கூலி’ என்று முடிந்திருக்கும்.

இந்த படம் தீபாவளி அல்லது ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என செய்திகள் வந்தன. ஆனால் தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இது ரஜினி ரசிகர்கள் எதிர்பாராத ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.

மேலும் ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை மற்றும் மறுநாள் 15 ஆம் தேதி அரசு விடுமுறை. அதைத்தொடர்ந்து வார இறுதி என தொடர் விடுமுறை நாட்களாக இருக்கிறது. கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் சுமார் ரூ.120 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அக்டோபர் மாதம் இட்லி கடை உட்பட அடுத்தடுத்து படங்கள் வெளிவர இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Read more: ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 8 உள்ளூர் விடுமுறை..!! – மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

English Summary

Sun Pictures has officially announced that the superstar-starrer Coolie will release on August 14th.

Next Post

'AK வராரு வழி விடுடா..!!' வெளியானது குட் பேட் அக்லி ட்ரெய்லர்..!! இத கவனிச்சீங்களா..? செம ட்ரீட்..

Fri Apr 4 , 2025
The trailer of Ajith Kumar's upcoming film 'Good Bad Ugly' has been released.

You May Like