குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் மின்னலுடன் கூடிய பருவமழை காரணமாக, ஒன்பது இறப்புகளை ஏற்படுத்தியது என்று மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே உறுதிப்படுத்தினார். பதான், கெடா, அகமதாபாத், பாவ்நகர், பனஸ்கந்தா, சோட்டா உதேபூர் மற்றும் பொடாட் மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த இறப்புகள் பெரும்பாலும் மின்னல் மற்றும் கனமழையால் ஏற்பட்டவை. சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த மேற்பரப்பு காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்து வரும் தினங்களில் காற்று மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் வீசும். லேசான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.