fbpx

சூரியகாந்தி விதையில் இத்தனை மருத்துவ குணங்களா..? இதனை சாப்பிடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

சூரிய காந்தி பூ என்றதும், நீண்ட தண்டு அதில் பச்சை நிற இலைகள் சூழ்ந்திருக்க, அடர் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் வண்ணங்களில் மெல்லிய இதழ்கள் கொண்டு பூத்துக்குலுங்குவது தான், நம் நினைவுக்கு வரும். சூரியன் உள்ள திசையை நோக்கியவாறு, இந்த மலர்கள் காற்றில் அசைந்தாடுவது, பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் ரம்மியமான காட்சி. இயற்கையின் அழகுக்கு அப்பாற்பட்டு இந்த மலரின் விதைகள் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. இவ்விதையின் மருத்துவப் பயன்கள், அதை சாப்பிடும் விதம்.

குறிப்பாக, சூரியகாந்தி விதையில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட், இரும்புச்சத்து, மக்னீசியம், ஜிங்க், காப்பர், மாங்கனீசு, செலீனியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதன் இடிப்படையில் அதன் மருத்துவ குணங்களை நோக்கும் போது,சூரியகாந்தி விதையில் உள்ள கரோட்டினாய்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.​

இதிலுள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். இன்சுலின் உற்பத்தியை தூண்டி நீரிழிவை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். சூரியகாந்தி விதையில் உள்ள வைட்டமின் பி6 மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது. எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் நோய்த் தொற்றுக்களை குறைக்க உதவி செய்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. மேலும், இதனை அதிகமாக எடுத்துக் கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கவே செய்கின்றன.

அத்தோடு இவ்விதை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதற்காக, வரைமுறை இல்லாமல் சாப்பிடக்கூடாது. பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, எள், பூசணி மற்றும் ஆளி விதைகளுடன் சூரிய காந்தி விதையையும் கலந்து ஒரு நாளைக்கு 30 கிராம் சாப்பிடலாம். முடிந்தவரை, உப்பு சேர்க்காமல் வறுப்பது நல்லது. அன்றாட சரிவிகித உணவின் ஒரு பாகமாக இந்த விதைகளும், நட்ஸும் இருப்பது அவசியம். இதை சாப்பிட்ட பின்னர், தேவையான தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியமானதாகும்.

Read More : சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா..? வெறும் 2 ஸ்பூன் போதும்..!! கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Beyond their natural beauty, the seeds of this flower have numerous medicinal properties.

Chella

Next Post

எச்சரிக்கை!. இந்தியாவில் முதல் மரணம் பதிவு!. அரியவகை GBS நரம்பியல் நோய்ப்பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது!. என்ன காரணம்?

Tue Jan 28 , 2025
Warning!. First death recorded in India!. Number of rare GBS neurological infections exceeds 100!. What is the reason?

You May Like