fbpx

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..!! பூமி திரும்புவது எப்போது? – இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்..!!

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 5அம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு, ஜூன் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.

9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜூன் 22ஆம் தேதியே இருவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டது. ஸ்டார்லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். 

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார். தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த அவர், போயிங் நிறுவனத்தின் ‘ஸ்டார்லைனர்’ ஸ்பேஸ் ஷிப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவரித்திருந்தார். இந்த பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருவதாக கூறிய சோம்நாத், தற்போது விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், ‘காலம் நீட்டிக்கப்பட்ட’ சூழலில் இருப்பதாக கூறியுள்ளார். சுனிதாவையும், புட்ச் வில்மோரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவது குறித்து நாசா தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more ; விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் இடம்பெறும் வாசகம்..!! என்ன தெரியுமா..?

English Summary

Sunita Williams in space..!! When will the earth return? – ISRO Chief Somnath Explanation

Next Post

’நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்’.!! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!!

Wed Aug 21 , 2024
Vijay has said that the heroic flag will be launched at 9 am tomorrow at 9 am.

You May Like