விண்வெளி ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேண்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது. ஆனால், விண்கலத்தில் எரிபொருள் கசிவு உள்ளிட்ட கோளாறு கண்டறியப்பட்டது.
ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக, விண்வெளியில் இருந்து திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்தது. போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலமானது, பாதுகாப்பு காரணங்களால் விண்வெளி வீரர்கள் இல்லாமல் , விண்கலம் மட்டும் தனியாக திரும்பியது.
இதையடுத்து, சிக்கல்களை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா தீவிரமாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை பூமிக்கு கொண்டு வர எலன் மஸ்க்கிஸ்ர்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலமானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இதற்காக கடந்த மார்ச் 13 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று மார்ச் 15 ஆம் தேதி அதிகாலை 4.33 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்குள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் நுழைந்தது. பின்னர் புதிய விண்வெளி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக மிதந்து வந்ததும் அவர்களை கட்டிப்பிடித்து கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் உள்பட 7 பேர் உள்ளனர்.
Read more: இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் வேலை.. டிகிரி போதும்..!! விண்ணப்பிக்க ரெடியா..?