பொங்கல் போனஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு துறையில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகையாக ரூ.500 வழங்கப்பட இருக்கிறது.

அதனைப் போலவே சிறப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவாளர்களுக்கு பொங்கல் போனஸ் தொகையாக ரூ.500 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.