fbpx

சூப்பர் சான்ஸ்..!! கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்..!! என்னென்ன சான்றிதழ்கள் தேவை..?

தமிழ்நாட்டில் ஏராளமான வசதியற்ற மாணவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் பெற அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொண்டு எளிதாக கல்விக்கடன் பெறுமாறு மாணவர்கள், பெற்றோர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்ச வரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கடன்களை வழங்குகின்றன.

ரூ.1 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கலாம். ரூ.1,00,001 முதல் ரூ.5,00,000 வரை அளிக்கப்படும் கடனுக்கு 100% பிணையம் பெறப்பட வேண்டும். படிப்பிற்குண்டான டியூஷன் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் மற்றும் உணவு கட்டணம், ஆய்வக கட்டணம், புத்தக கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்து கடன் வழங்கப்படும். கடனுக்கான வட்டி விகிதத்தினை அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்புக் குழு மூலம் நிர்ணயம் செய்யப்படும். இணைப்புச் சங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை நிதியுதவி வழங்கும் வங்கி நிர்ணயம் செய்ய வேண்டும்.

கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தப்படாதபட்சத்தில், கடனை வசூலிக்க இதர கடன்களுக்கு பின்பற்றப்படும் சட்டபூர்வ வழிமுறைகள் இக்கடனுக்கும் பொருந்தும். மாணவர்கள் கடன் பெற இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். கல்விக் கடன் பெறும் மாணவன் அல்லது மாணவி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேவையான சான்றிதழ்கள், ஆவணங்கள் : கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்று, இருப்பிடச் சான்று, புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், கல்லூரி கட்டண ரசீது, முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய சான்று, கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளையும் தயாராக எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Chella

Next Post

மின்கட்டணம் உயர்வு, விவசாய மானியங்கள் ரத்தா..? பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் பரபரப்பு விளக்கம்..!!

Thu Feb 15 , 2024
முத்தரப்பு உடன்படிக்கையால், மின்வாரியம் தனியார்மயமாகும், மின்கட்டணம் உயரும், விவசாய மானியங்கள் ரத்தாகும் என்பன போன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் சட்ட ஆலோசகர் முரளி கிருஷ்ணன், பாரதிய மின் பொறியாளர் கழக மாநில பொதுச்செயலாளர் நடராஜன், பாரதிய மின் அலுவலர் கழக பொதுச்செயலாளர் மணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2010 அக்டோபர் 19ஆம் தேதியில் பிறப்பிக்கப்பட்ட […]

You May Like