fbpx

சூப்பர் குட் நியூஸ்..!! மொத்தம் 24 நாட்கள் விடுமுறை..!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

2023ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு (ஜன.1), தைப்பொங்கல் (ஜன.15), திருவள்ளுவர் தினம் (ஜன.16), உழவர் தினம் (ஜன.17), குடியரசு தினம் (ஜன.26), தைப் பூசம் (பிப்.5), தெலுங்கு வருடப் பிறப்பு (மார்ச் 22), தெலுங்கு வருடப்பிறப்பு (மார்ச் 22), வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு (ஏப்.1), மகாவீர் ஜெயந்தி (ஏப்.4), புனித வெள்ளி (ஏப்.7), தமிழ்ப் புத்தாண்டு (ஏப்.14), ரம்ஜான் (ஏப். 22), மே தினம் (மே. 1), பக்ரீத் (ஜூன் 29), மொகரம் (ஜூலை 29), சுதந்திர தினம் (ஆக. 15), கிருஷ்ண ஜெயந்தி (செப். 6), விநாயகர் சதுர்த்தி (செப். 17), மிலாது நபி (செப். 28), காந்தி ஜெயந்தி (அக். 2), ஆயுத பூஜை (அக். 23), விஜய தசமி (அக். 24), தீபாவளி (நவ. 12), கிறிஸ்துமஸ் (டிச. 24) ஆகிய 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் குட் நியூஸ்..!! மொத்தம் 24 நாட்கள் விடுமுறை..!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்த தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்..!! லிஸ்டில் இடம்பிடித்த தமிழ்நாடு..!! மத்திய அரசின் அறிக்கையால் அதிர்ச்சி..!!

Thu Dec 15 , 2022
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, தமிழ்நாடு, கேரளா உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக 2020ஆம் ஆண்டில் 3,71,503 […]

You May Like